Thursday, 22 May 2014

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17-சில மணித்துளிகள்


முள்ளிவாய்க்கால் , வைகாசி 17 , எங்கள் ஆட்சி மண்ணை துறந்த எங்களின்
இறுதி நிமிடங்கள் - அந்த நேர உணர்வின் சில பகுதி
                                                         நானும் சுதனும் என்ன செய்வது என்ற திடமான
முடிவற்று இருந்தோம்.எம்மோடு இருந்தவரை நேற்று பிற்பகல் கதைத்து
இராணுவ பகுதிக்குள் அனுப்பி இருந்தோம்.எந்த காரணம் கொண்டும்
சரணடைய வேண்டாம் .பொது மக்கள் போன்றே செல்லுங்கள் என்றே
சொல்லி அனுப்பி இருந்தோம்.போகும் பொது ஒவ்வொருவரும் வந்து
நீங்கள் என்னமாதிரி?நாங்களும் நிக்கிறோம் என்ற பிடிவாதங்களை
தளர்த்தியே அனுப்பி வைத்தோம்.

தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை பணயம் வைக்காதீர்.


உலக தமிழர் ஒன்றாய் நின்று சிங்களத்திற்கு சிறு அடி கொடுத்துள்ளனர்.வைகாசி 18 உடன் யாவும் முடிந்தது என்றே
சிங்களம் கர்ச்சித்தது.சுயநலனுக்காய் காட்டிக்கொடுக்கும் சில
தமிழ் கோடரிகளையும் பாவித்து தமிழர்களில் அக்கறையுள்ளவர்
போல் வேசமிட்டு தமிழ் இன,நில அழிவை திட்டமிட்டு
முன்னகர்த்துகிறது. திரைக்கு முன்னும் பின்னும் இனச்சுத்திகரிப்பு நடை பெறுகிறது.

பசில் ஐயா சொல்கிறார் மேற்குலகத்திட்க்கு தேவை என்றால் கடன்குடுக்கலாமாம்.


பசில் ஐயா சொல்கிறார்
மேற்குலகத்திட்க்கு தேவை என்றால்
கடன்குடுக்கலாமாம்.
எப்பிடி ஐயா
வாங்கின கடனில
ஒருதுளியும் திருப்பிக்கொடுக்கவில்லை
இதுக்குள்ள எப்படி ஐயா
போன கிழமைதான்
மண்ணெண்ணெய்,கின்ணெண்ணை எல்லாம்
விலை ஏறிச்சு

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது


அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது.எந்த களவும்
தெரியாத பிள்ளை, குழந்தை மனம் இம்மியளவும் குறையாத பாலகன் .
பாடசாலை தவிர்ந்து எப்போதும் தாயின் பார்வை அவன்மீது இருக்கும் .
                                   பாடசாலைக்கு பின்பக்கம் என்வீடு,என்வீட்டுக்கு
பின்புறம் அவன் பாடசாலை விட்டு வந்து நிக்கும் முகாம்.பாடசாலையிலோ
அன்றி பின்முகாமிலோ ஏதாவது அனர்த்தமாயின் மாமா வீட்டிற்கு
ஓடிவிடு இது தாயின் கட்டளை.

உண்மைகள் மறைக்கப்படுவது கொடுமையானது


மனித உயிர்கள் உன்னதமானவை.மனித அன்பு நிலைக்கவேண்டியது.
போர் கொடூரமானது.மனிதன் அமைதியாகவும்,மனச்சாட்சி வழி
நடந்து அன்பில் அமிழ்தலே நல்லவாழ்வு.  இவற்றுடன் சுதந்திரம் பெற்றவாழ்வே நிறைவாழ்வு.
                               ஒரு இனத்தின் உரிமை,நிலம் பறிக்கப்பட்டு,இன அடையாளம் ,
உயிர்கள் இழக்கப்படும்போது அந்த இனம் மீது போர் திணிக்கப்படுகிறது.
இனத்தின் வாழ்வுரிமையை காக்க போராளிகள் உருவாகிறார்கள்.அநேகர் 
 மனச்சாட்சியை மீறமுடியாமல் போராளியாகிறார்கள்.

உண்மைக் கதை - 06


அவன் ஒரு போராளி மருத்துவன்.பல ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்தவன்.
வெற்றி பெற்ற சத்திரசிகிச்சையாளன்.வேகம் கூடிய சத்திரசிகிச்சையாளன் .
அவனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன .மகப்பேறு சத்திரசிகிச்சை
உள்ளீடாய் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் செய்தான்.
                                                    நாலாம் கட்ட ஈழப்போரில் கண்ணாடியுடன் சத்திர
சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஆரம்பித்தது.கண்ணாடியுடன்
செய்வது முன் வெறும் கண்ணோடு செய்ததைப்போல் சௌகரியமாக
இருக்கவில்லை.என்றாலும் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக சென்றன.

உண்மைக் கதை -05


அது எண்பத்திநான்காம் ஆண்டாக இருக்க வேண்டும் அவர்கள் இருவரும்
எதிரெதிராய் சந்தித்துக்கொள்வார்கள்.ஆனால் இருவரும் வெவ்வேறு
இயக்க உறுப்பினராய்,சிவாவும் ஓவியனும் ,ஓவியனோ ஒவ்வொரு
தடவையும் முறைப்பான் சிவா தலையை குனிந்து சென்றுவிடுவான்
இருவரும் முன் பின் அறிமுகமில்லாதவர்தான்.
                                      சிலகாலத்திட்குப்பின் சிவாவும் ஓவியன் சார்ந்த
இயக்கத்தில் கடமை செய்ய மாறி வந்தான்.இப்போது அவர்களுக்கிடையில்
புரிந்துணர்வு உருவாகிற்று.சிவா பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.

சுதந்திரத்திற்கு ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.

1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் தமிழீழமே தீர்வு என்று தமிழ்
மக்களால் ஜனநாயகமுறையில் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது.
யாருமே ஜனநாயகத்தை பொருட்படுத்தவோ/  மதிக்கவோ இல்லை.
தீர்வும் கிடைக்கவில்லை மாறாய் அப்பாவிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டது.
ஆயுத போராட்டம் தவிர்க்கமுடியாமல் போயிற்று.

கொலைவெறிடா டேய் கொலைவெறிடா...

தமிழீழ பாடல்

விடுதலைப்புலிகளை குற்றம் சொல்லல் நியாயமா?


விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியவரை சுட்டார்கள், ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள்.மக்கள் மீது 
அவர்களுக்கு அக்கறையில்லை என்று அபாண்டமான முழுப்பொய்யை 
உலகம் மீது திணிக்க சிங்கள அரசும்,அவர் கூட்டுகளும் முயல்கின்றன.
                                       உண்மையில் அங்கு என்ன நடந்தது?
                 விடுதலைப்புலிகள் இயன்றவரை போராட்டத்தை தக்கவைக்க 
முழு முயற்சி எடுத்தார்கள்.விடுதலைப்புலிகள் பொதுவில் என்றுமே 
தங்களுக்காய் வாழ்ந்ததில்லை.ஆளணியும்,ஆயுதபலமும் உலக 
சிங்கள கூட்டால் சிதைக்கப்பட்டபோது அதை மீள கட்டி எழுப்ப 
அவர்கள் பட்டபாடு/ உழைப்பை யாரறிவார்?

ஒரு ஊடகவியலாளனின் உழைப்பின் மீள்பார்வை


அது 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் யாழ் நகரெங்கும் மாவீரர் நினைவு 
அமைவிடங்கள் அமைக்கப்பட்டன.சிறந்த அமைவிட அமைப்பிற்கு 
பரிசு வழங்கப்படும் எனும் கதையும் உலாவிற்று.சங்கரத்தை சந்தியில் 
ஓவியன் தலைமையிலான அணி பேருந்துகளின் தகரங்களை 
சிரமங்களின் ஊடு கழற்றி, வர்ணம் பூசி, சங்கானையைச் சேர்ந்த 
ஓவியர் ஒருவரால் படங்கள் வரையப்பட்டன.படங்கள் அட்டகாசமாக 
இருந்தன.படங்களுக்கான விளக்க வரிகளை ஓவியன் தூரிகைகளால் 
அழகாக எழுதி இருந்தான்.

ஆறாத,அழியாத மனவடுவும்,


ஆறாத,அழியாத மனவடுவும்,
தாளாத சோகமும்,
வீழாத பாசமுமாய் நீளும் 
தீராத தாகம் 

மறக்கப்பட்ட சுமைதாங்கிகள்


இது 1995,1996 காலப்பகுதி வன்னி மண்ணின் சனத்தொகை திடீரென
நான்கு மடங்குகளால் அதிகரித்தது. தங்குமிடம்,நோய் ,உணவு என
பெரும் சவால்களை விடுதலைப்புலிகள் இராணுவ நெருக்குவாரத்துடன்
சேர்த்து எதிர் கொண்டனர்.மலேரியாவாலும்,செப்ற்றிசீமியாவாலும்
அதிக உயிர்கள் போயிற்று .சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும்
பெரிய அளவில் போசாக்கு குறைபாடு தோன்றிற்று.

பூகோளத்தின் எல்லை மட்டுமல்ல சோகத்தின் எல்லையும் பெரியது தான்.


வைகாசி இரண்டாயிரத்தி ஒன்பதுடன் புலிப்போராளிகளின்,அவர்,மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிதறிப்போயிற்று.அவர்கள் பட்ட துயரின்
அளவு ஆராயமுடியாப் பெரியது . தம் இனத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும்
அவா ஒன்றுடனேயே பலர் தானாக புலிகள் அமைப்பில் இணைந்தனர்.
மனிதரில் இருக்கும் அழுக்கான சுயநலத்தை சுருக்கிட்டு இனச்சுமையை
சுமக்கப்போனவர் அவர். அவர்களில் பலர் இன்று மாவீரர் ஆகிவிட்டனர்.
பலர் இன்றும் வெளித்தெரியா சிறைகளில் அங்கங்கள் பிடுங்கப்பட்டு
சித்திரவதையில் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .

உண்மைக் கதை - 04


வெறும் நூலில் தொங்கும் வாழ்க்கை அவனைப்பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.பாடசாலையில்படிப்பில் எப்போதும் முதலாம் பிள்ளையாய் வருவான்.அவனுக்கு கணிதம்,விஞ்ஞானம் ,விளையாட்டில் அதிக விருப்பம்.பள்ளிக்கூடத்தில் வழமைபோல எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும்.அவனின் பட்டப்பெயர் விஞ்ஞானப்பண்டிதர்.பண்டிதர் என்றே சகமாணவர் கூப்பிடுவார்கள் .அவனுக்கு விஞ்ஞானியாய் வரவேண்டும்
என்பதில் பித்துப்பிடித்திருந்தான்.இதற்கு சமுகம் எந்தளவுக்கு
காரணம் என்று புரியவில்லை.அவனுக்கும் அந்த திறமை
இருந்ததோ என்று சரியாகத் தெரியவில்லை.

மாவீரர்கள் அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்

மாவீரர்கள்
காலத்தால் அழியாதவர்கள்
அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்
விடுதலைத் தீயை
தமக்குள் சுமந்து ,
பாசமழையை
எம்மீது கொட்டியவர்கள்
வீரர்களுக்கு சாவு இல்லை
இவர்களுக்கு ஈடு இல்லை





யார் செய்தது குற்றம் ?


விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

எழுத்தாளர்,மாவீரர் மலரவன்


மலரவன் -  இவன்  கோட்டை,காரைநகர்,மாங்குளம்,சிலா வத்துறை,ஆனையிறவு ,மணலாறுஉள்ளிட்ட பல இராணுவ முகாம் தாக்குதலில் பங்குபற்றி வளலாய் தொடர் காவலரண் (24/11/1992) தாக்குதலில் கப்டன் மலரவனாய்  வீரச்சாவு எய்தினான். பசிலன் மோட்டார் அணியின் துணைப் பொறுப்பாளராயும்வி.பு களின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு   பொறுப்பாளராயும்,யாழ் மாவட்ட இராணுவ அறிக்கை பொறுப்பாளராயும் கடமை செய்தான்.

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.


"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?


குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?

சுதந்திரம் மீள வருமா?


பூர்வீக மண்ணில
சொந்த உழைப்பில
கட்டின வீட்டில
மீள் குடியேற்றமாம்.

காதல் -சிறு குறிப்பு


பூவைப் போல
காதல் இல்லை
பூ உதிர்ந்து விடும்
வேரைப்போல
காதல் வேண்டும் .
மழைக்காலத்தில் வரும்
சூரிய ஒளியைப்போல
காதல் தேவைப்படுகிறது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
விலங்குகளுக்கும் தான்.

அம்மா அது உனக்குப் போதும்


தாயை திருப்பி
அனுப்பியது இந்தியா.
படுக்கை,
பக்கவாத நோயாளிக்கு
வர விசா வழங்கி
வந்த பின்
திருப்பியது இந்தியா
வெந்தது ஈவு,இரக்கம்.

காற்றினில் செல்லும் புலம்பல்


அப்பா அம்மா
மனைவி பிள்ளைகள்
வீடு சமூகம் இனம் என்ற
கட்டுக்கோப்புகள்
மணல்வீடு ஆகிடுமா?

வனம் கூட அழியாமல்
காவல் காத்த தெய்வங்கள்
எங்கே?
நாடு,மக்கள் என்று
துளியும் சுயநலமற்ற
மாவீரர் அவர்
சுவடுகள் எங்கே?

விடுதலையும் காதலைப் போல


இன அழிப்பு
அல்லது இனச்சுத்திகரிப்பு
இனக் கலப்பு
நிலப்பறிப்பு
ஈழத்தமிழரை
இல்லாதாக்கும்
சிங்களக் கனவு நனவாகுமா?
கோடரிக்காம்புகள்,
விலாங்கு மீன்களுக்கு
என்ன நடக்கும்?
வாழும் உரிமைதான் போகிறது
வாழ்ந்த அடையாளமுமா?

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு


எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.

காந்தியின் கண்ணீர்


நண்பா உன் சிலையையா
உடைக்கிறார்கள்?

நல்லூரில்
நல்கந்தன் முன்
நலிந்த இனத்தின்
நலன் வேண்டி
நீர் கூட அருந்தாமல்
ஈரேழு நாட்கள்
நீ  எரிந்து
ஒப்பற்ற தியாகமானாய்.

உண்மைக் கதை -04


சமாதானம்  எனப் பேசப்பட்ட காலம். வன்னியின் அழகு மேலும் மெருகேறியது. எங்களுக்கெல்லாம்  உலகின் அழகே வன்னிதான் போல இருந்தது.அது போராளிகளுக்கும் ஓரளவு  ஓய்வு  காலம். அவர்களுக்கும்  திருமணம் நடந்தது.இருவரும்  நீண்டகாலப் போராளிகள் . அவனது பெயர் ஈழம் .அவன் மணலாறு படையணியில் இருந்து சண்டையில் காயமடைந்துமுதிர்ந்த மருத்துவர் ஒருவரின்  சமயோசிதத்தால்  மயிரிழையில் உயிர் பிழைத்தவன்.பின் மருத்துவப் பிரிவில் மருத்துவப் 
போராளியாகி நீண்ட மருத்துவப் பணிசெய்தவன்.    

அரச பயங்கரவாதமும் சில பெறுபேறுகளும்.


பதினைந்து  வயதில் 
எழுதப்  பழகுகிறாள் 
எழுதிய கையில்லாததால்.
துரு துரு கண்களால் 
உற்று உற்றுப் பார்க்கிறாள் 
காதுகள் கேட்காததால்.  

பிரியசகி


பிரிவு 
கிழக்கு  மேற்காகிறது.
மனதுகள்  மட்டும் 
ஒருபுள்ளியாய்,
பூமியாய்  சுழல்கிறது.
மனதை  எழுதி, மடித்து 
கடிதமாய்  அனுப்ப 
முகவரிகள்  ஏது?
 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி