Saturday, 24 May 2014

என்னவள் கமரா விழிகள் சங்கமித்த புள்ளிகள்




ஒரு அநாதையின் விமான பயணம்


அவனுக்கு ஐம்பது வயதிற்கு கிட்ட இருக்கும்.
அவன் அவனது முன்னைய நிறையிலிருந்து ஒரு 
இருபது கிலோவாவது குறைந்திருப்பான்.அவன் இப்போது 
கட்டுநாயக்காவில் விமானத்தில் ஏறிவிட்டான்.அவனுக்கும் 
தான் கொலை வளையத்தில் இருந்து தப்பியதான உணர்வு 
வருகிறது.விமானம் புறப்பட அவனது கண்களும் குளமாயிற்று.

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்


நண்பா!
நீ இல்லை 
இருந்தும் 
கடிதம் எழுதுகிறேன் 
தமீழீழம் எங்கும் 
எம் சுவாசம் இருந்திருக்கிறது 
இன்று எங்கும் ஆக்கிரமிப்பு 
நண்பா !

என்னவளுக்கு !

என்னவளுக்கு !
இன்று 
தொழிலாளர் /உழைப்பாளர் தினம் 
இன்றுதான் 
உன் பிறந்த தினமும் 
"எட்டு மணி நேர வேலை "என்று
தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது 
என்னவளே !

இலங்கையில் சிங்களம் செய்தது போர்க்குற்றம் மட்டும்தானா?


போர் சட்ட விதி முறைகளுக்குள் உட்பட்டது. 
இவ்விதி முறைகளை தாண்டி போரில் திட்டமிட்டு 
செய்யப்படும் குற்றங்கள் போர் குற்றங்கள் ஆகும் .
இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல.
போர் விமானங்களாலும்,எறிகனையாலும் ,ஆழ 
ஊடுருவும் படையணியாலும் திட்டமிட்டு 

ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி


ஆழ ஊடுருவும் அணி 
சிறிலங்காவின் 
இன்னுமொரு 
போர்க்குற்ற சாட்சி 
ஆழ ஊடுருவும் அணியால் 
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் 
கொல்லப்பட்டுள்ளார்கள் 
குறிப்பாக மருத்துவ வாகனங்கள் 
அவர்களால் குறிவைக்கப்பட்டன.

ஈழம் எப்படி இருக்கிறது?


இலங்கை சுதந்திரம் அடைந்ததாய் 
கருதப்படும் 1948ஆம் ஆண்டிலேயே சிங்கள ஆட்சி 
குடிமைச்சட்டத்தை அறிமுகப்படுத்தி அரைவாசி 
மலையகத்தமிழரை அவர்களது விருப்பத்திற்கு 
மாறாய் இந்தியாவிற்கு நாடு கடத்திற்று.பத்து 
வருடம் ஆகமுன்பே தனிச்சிங்கள சட்டத்தை 

தேசியத்தலைவர் எப்போதும் தமது மக்களின் விடுதலையையும் , சுபீட்ச்ச வாழ்வையுமே நினைத்தார்


தேசியத்தலைவர் அவர்கள் எப்போதும் 
தமது மக்களின் விடுதலையையும் ,சுபீட்ச்ச வாழ்வையுமே   
நினைத்தார்.வரலாறுகளில் புனைவுகள் 
வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக 
இருந்தார்.தொண்ணூறுகளின் நடுப்பகுதிகளுக்குப்பின் 
நிதர்சனம் நிறுவனம் தம் வரலாறை எழுத 
விரும்பிற்று.அரசியல் துறை பொறுப்பாளர்

முள்ளிவாய்க்கால் கவிதைகள்


முள்ளிவாய்க்கால் ஓரத்திலே 
விடிவு முடிவான காலத்திலே
அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் 
முதுமையான பசுமை நினைவை  
சுமக்கும் வாய்க்கால் 
இப்போது பயங்கரமாய் 
இரத்தம் கலந்த சிவப்பாய் 
மனிதரை அல்ல 

செயலில் வாழ்ந்த வீரன் நீ


சகோதரனே !
இன்று 
உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் 
ஒன்றாய் வளர்ந்தோம் 
ஓரணியில் விளையாடினோம் 
கால அழைப்பை ஏற்று 
இன விடுதலைக்காய் உழைத்தோம் 
உனக்கும் எனக்கும்

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!


ன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு 
ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 
வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை 
நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு 
பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி 
நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த 
மாற்றங்களும் இல்லை.

இலங்கையின் இனவரலாறு


இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு 
இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.

அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.




அந்த அம்மாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள் .
அந்த செழிப்பான செம்மண்ணில் அவர்களது 
வாழ்வு எவ்வளவு அழகாக இருந்தது.மூன்று 
பேருமே விளையாட்டில் வீரர்கள்.அவர்களது 
வீட்டில் கேடயங்களுக்கு குறைவிருக்காது.

விடுதலைக்கு உண்மையாய் உழைத்தார்கள்


இலங்கையில் இனக்கலவரம் நடைபெறவில்லை.
ஒரு இனத்தை ஒரு இனம் படுகொலைதான் செய்தது.
அரசால் திட்டமிடப்பட்டு நாடாத்தப்பட்ட 1983ஆம் ஆண்டுஇனப்படுகொலையின் பின் உணர்வு உள்ள எல்லா தமிழ் இளைஞரும் ஏதோ ஒரு போராட்ட  இயக்கத்துடன் இணைந்தார்கள்.அவனும் 1984இல்தனது எட்டாம் வகுப்பில் ஒரு இயக்கத்துடன் இணைந்துகொண்டான். அவனது இயக்கப்பெயர் துளசி .

தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது


தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது.சிங்கள அரசு 
சிங்கள குடியேற்றத்தை முன்பைவிட வேகமாய் செய்கிறது.
குறிப்பாக முல்லை மாவட்டம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
முல்லை மாவட்டத்தில் வசிக்கும் முல்லை பாராளமன்ற 
உறுப்பினர் எவரும் இப்போது இல்லை.இது சிங்களத்திற்கு 
வசதியாய் அமைந்து விட்டது.அரசினதும்,ஆளுனரதும் ,
முஸ்லீம் அமைச்சர் ஒருவரினதும் எடுபிடிகளாய் சில 
அரச உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.

எங்கள் ஒப்பற்ற தலைவன்



தலைவர் பிரபாகரன் நடைமுறை சாத்தியமான ஒரு உண்மை மனிதன் .அவரைப்பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லைத்தான் இருந்தும் 
அவரை வேண்டுமென்றே பிழையாக எழுதுபவர்க்காய் இதை பகிர 
வேண்டியிருக்கிறது.  தலைவர் இன மத மொழி சாதி பேதம் அற்றவர் .(அவர் நம்பியிருந்த பொறுப்பாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள் .அரசியல் துறைப்பொறுப்பாளரின்  துணைவியார் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.

முஸ்லீம் மக்கள்


தமிழ்பேசும் முஸ்லீம் இளைஞர்கள் விடுதலைப்போராட்டத்தின் 
( 80 களில்) ஆரம்ப காலங்களில் போராளிகளாக விடுதலைக்கு 
உழைத்தார்கள் . சிலர் மாவீரர்களாய் எங்களுள் வாழ்கிறார்கள்.
அன்று யாழ் நகரில் வாழ்ந்த பலருக்கு கப்டன் பாரத்தை தெரிந்திருக்கும்.
அவன் யாழ் கோட்டையில் ஆக்கிரமித்திருந்த இராணுவத்துடனான 
மோதலில் வீரச்சாவு அடைந்திருந்தான்.

உயிர்கள் பெறுமதியானவை


விடுதலைப்புலிகளின் தலைமை தனது இனத்தின் விடுதலை 
என்ற குறிக்கோளின் அச்சில் எப்போதும் சுழன்று கொண்டிருந்தது.
எந்த நாடுகளின் பின்னணியிலும் அது தங்கி இருக்கவில்லை.ஆனால் பல 
இயக்கங்கள் உருவாக வேறு நாடுகள் தமது நலனுக்காய் பின்னணியில் இருந்தன.இது எமது பலத்தை சிதறப்பண்ணியது.

நன்கு பழகிய மனிதரில் எண்பது வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.


அவனது சின்ன வயது வாழ்க்கை என்ன அழகானது.பிற்காலம் இவ்வளவு
கடினமாய் இருக்கும் என்று அப்போது அவன் துளியும் எண்ணியதில்லை.
பாடசாலை வாழ்க்கையுடன் இனவிடுதலையின் அவசியமும்
பொறுப்பும் நெருப்பாய் பற்றிக்கொண்டது.மூதாதையர்கள்
விடுதலையை பெற்றுத்தந்திருந்தால் அவனினதும் அவன்
போன்றவரின் வாழ்வும் இனிமையாய் தொடர்ந்திருக்கும்.
இயக்க வாழ்வு மிகக்கடினமானது.

அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்




விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது. இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசத்திக்குள் இருந்து வி.பு. பிரதேசத்திற்குள்
போனதும் உடம்பில புது இரத்தம்  ஊறும் .அந்த நாள் இனி வருமா?
மனம் ஏங்கிச் சாகிறது.தமிழரின்  நிர்வாகம் .வேகமானியுடன் காவல்துறை 
ஒளிச்சு நிக்கும் .பிடிபட்டால் fine தான் தப்ப ஏலாது.வன்னியிக்க 
எங்க போனாலும் மனசு நிறையும்.பாண்டியன் ஐஸ் கிரீம் வேறு எங்கயும் 
குடிக்கமுடியாது.சேரன் ரோல்ஸ் எழுதவே வாயூறுது . சேன்ட நாசிகூறி 
சொல்லி வேலையில்லை பிரைட் ரைஸ்,சூப் என்றால் இளம்தென்றல்தான் .

உண்மைக் கதை - 07


கணவன் ,மனைவி ஒரே தொழிலில் இருப்பது அருமை.சிலர் மருத்துவராக
இருந்திருக்கிறார்கள்.ஆசிரியராக இருந்திருக்கிறார்கள் .படைப்பாளிகளாக
இருந்திருக்கிறார்கள்.ஏன் வலைப்பதிவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஈழத்தில் போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.ஒருபடிமேல் போய்
மாவீரர்களாக இருக்கிறார்கள்.


விடுதலையை உயிராய் நேசித்த புனிதன்




எளிமையில் என்றும் வாழ்ந்தாய் 
கருணையை இதயத்தில் சுமந்தாய் 
மாவீரர் நினைவில் சதா மூழ்குவாய் 
இலட்ச்சியத்தில் இளகாய்   
வீரனுக்கு உன்னைவிட யார் இவ்வுலகில் உண்டு 
தலைவனாய் இருந்தும் இறுதிவரை 
தலையணை அற்றே படுத்துறங்குவாய்
அர்ப்பணிப்பின் ஆணிவேர் நீதான் 
பலவீனம் அற்ற மனிதன் 
விடுதலையை உயிராய் நேசித்த புனிதன் 

Thursday, 22 May 2014

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17-சில மணித்துளிகள்


முள்ளிவாய்க்கால் , வைகாசி 17 , எங்கள் ஆட்சி மண்ணை துறந்த எங்களின்
இறுதி நிமிடங்கள் - அந்த நேர உணர்வின் சில பகுதி
                                                         நானும் சுதனும் என்ன செய்வது என்ற திடமான
முடிவற்று இருந்தோம்.எம்மோடு இருந்தவரை நேற்று பிற்பகல் கதைத்து
இராணுவ பகுதிக்குள் அனுப்பி இருந்தோம்.எந்த காரணம் கொண்டும்
சரணடைய வேண்டாம் .பொது மக்கள் போன்றே செல்லுங்கள் என்றே
சொல்லி அனுப்பி இருந்தோம்.போகும் பொது ஒவ்வொருவரும் வந்து
நீங்கள் என்னமாதிரி?நாங்களும் நிக்கிறோம் என்ற பிடிவாதங்களை
தளர்த்தியே அனுப்பி வைத்தோம்.

தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை பணயம் வைக்காதீர்.


உலக தமிழர் ஒன்றாய் நின்று சிங்களத்திற்கு சிறு அடி கொடுத்துள்ளனர்.வைகாசி 18 உடன் யாவும் முடிந்தது என்றே
சிங்களம் கர்ச்சித்தது.சுயநலனுக்காய் காட்டிக்கொடுக்கும் சில
தமிழ் கோடரிகளையும் பாவித்து தமிழர்களில் அக்கறையுள்ளவர்
போல் வேசமிட்டு தமிழ் இன,நில அழிவை திட்டமிட்டு
முன்னகர்த்துகிறது. திரைக்கு முன்னும் பின்னும் இனச்சுத்திகரிப்பு நடை பெறுகிறது.

பசில் ஐயா சொல்கிறார் மேற்குலகத்திட்க்கு தேவை என்றால் கடன்குடுக்கலாமாம்.


பசில் ஐயா சொல்கிறார்
மேற்குலகத்திட்க்கு தேவை என்றால்
கடன்குடுக்கலாமாம்.
எப்பிடி ஐயா
வாங்கின கடனில
ஒருதுளியும் திருப்பிக்கொடுக்கவில்லை
இதுக்குள்ள எப்படி ஐயா
போன கிழமைதான்
மண்ணெண்ணெய்,கின்ணெண்ணை எல்லாம்
விலை ஏறிச்சு

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது


அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது.எந்த களவும்
தெரியாத பிள்ளை, குழந்தை மனம் இம்மியளவும் குறையாத பாலகன் .
பாடசாலை தவிர்ந்து எப்போதும் தாயின் பார்வை அவன்மீது இருக்கும் .
                                   பாடசாலைக்கு பின்பக்கம் என்வீடு,என்வீட்டுக்கு
பின்புறம் அவன் பாடசாலை விட்டு வந்து நிக்கும் முகாம்.பாடசாலையிலோ
அன்றி பின்முகாமிலோ ஏதாவது அனர்த்தமாயின் மாமா வீட்டிற்கு
ஓடிவிடு இது தாயின் கட்டளை.

உண்மைகள் மறைக்கப்படுவது கொடுமையானது


மனித உயிர்கள் உன்னதமானவை.மனித அன்பு நிலைக்கவேண்டியது.
போர் கொடூரமானது.மனிதன் அமைதியாகவும்,மனச்சாட்சி வழி
நடந்து அன்பில் அமிழ்தலே நல்லவாழ்வு.  இவற்றுடன் சுதந்திரம் பெற்றவாழ்வே நிறைவாழ்வு.
                               ஒரு இனத்தின் உரிமை,நிலம் பறிக்கப்பட்டு,இன அடையாளம் ,
உயிர்கள் இழக்கப்படும்போது அந்த இனம் மீது போர் திணிக்கப்படுகிறது.
இனத்தின் வாழ்வுரிமையை காக்க போராளிகள் உருவாகிறார்கள்.அநேகர் 
 மனச்சாட்சியை மீறமுடியாமல் போராளியாகிறார்கள்.

உண்மைக் கதை - 06


அவன் ஒரு போராளி மருத்துவன்.பல ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்தவன்.
வெற்றி பெற்ற சத்திரசிகிச்சையாளன்.வேகம் கூடிய சத்திரசிகிச்சையாளன் .
அவனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன .மகப்பேறு சத்திரசிகிச்சை
உள்ளீடாய் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் செய்தான்.
                                                    நாலாம் கட்ட ஈழப்போரில் கண்ணாடியுடன் சத்திர
சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஆரம்பித்தது.கண்ணாடியுடன்
செய்வது முன் வெறும் கண்ணோடு செய்ததைப்போல் சௌகரியமாக
இருக்கவில்லை.என்றாலும் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக சென்றன.

உண்மைக் கதை -05


அது எண்பத்திநான்காம் ஆண்டாக இருக்க வேண்டும் அவர்கள் இருவரும்
எதிரெதிராய் சந்தித்துக்கொள்வார்கள்.ஆனால் இருவரும் வெவ்வேறு
இயக்க உறுப்பினராய்,சிவாவும் ஓவியனும் ,ஓவியனோ ஒவ்வொரு
தடவையும் முறைப்பான் சிவா தலையை குனிந்து சென்றுவிடுவான்
இருவரும் முன் பின் அறிமுகமில்லாதவர்தான்.
                                      சிலகாலத்திட்குப்பின் சிவாவும் ஓவியன் சார்ந்த
இயக்கத்தில் கடமை செய்ய மாறி வந்தான்.இப்போது அவர்களுக்கிடையில்
புரிந்துணர்வு உருவாகிற்று.சிவா பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.

சுதந்திரத்திற்கு ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.

1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் தமிழீழமே தீர்வு என்று தமிழ்
மக்களால் ஜனநாயகமுறையில் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது.
யாருமே ஜனநாயகத்தை பொருட்படுத்தவோ/  மதிக்கவோ இல்லை.
தீர்வும் கிடைக்கவில்லை மாறாய் அப்பாவிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டது.
ஆயுத போராட்டம் தவிர்க்கமுடியாமல் போயிற்று.

கொலைவெறிடா டேய் கொலைவெறிடா...

தமிழீழ பாடல்

விடுதலைப்புலிகளை குற்றம் சொல்லல் நியாயமா?


விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியவரை சுட்டார்கள், ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள்.மக்கள் மீது 
அவர்களுக்கு அக்கறையில்லை என்று அபாண்டமான முழுப்பொய்யை 
உலகம் மீது திணிக்க சிங்கள அரசும்,அவர் கூட்டுகளும் முயல்கின்றன.
                                       உண்மையில் அங்கு என்ன நடந்தது?
                 விடுதலைப்புலிகள் இயன்றவரை போராட்டத்தை தக்கவைக்க 
முழு முயற்சி எடுத்தார்கள்.விடுதலைப்புலிகள் பொதுவில் என்றுமே 
தங்களுக்காய் வாழ்ந்ததில்லை.ஆளணியும்,ஆயுதபலமும் உலக 
சிங்கள கூட்டால் சிதைக்கப்பட்டபோது அதை மீள கட்டி எழுப்ப 
அவர்கள் பட்டபாடு/ உழைப்பை யாரறிவார்?

ஒரு ஊடகவியலாளனின் உழைப்பின் மீள்பார்வை


அது 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் யாழ் நகரெங்கும் மாவீரர் நினைவு 
அமைவிடங்கள் அமைக்கப்பட்டன.சிறந்த அமைவிட அமைப்பிற்கு 
பரிசு வழங்கப்படும் எனும் கதையும் உலாவிற்று.சங்கரத்தை சந்தியில் 
ஓவியன் தலைமையிலான அணி பேருந்துகளின் தகரங்களை 
சிரமங்களின் ஊடு கழற்றி, வர்ணம் பூசி, சங்கானையைச் சேர்ந்த 
ஓவியர் ஒருவரால் படங்கள் வரையப்பட்டன.படங்கள் அட்டகாசமாக 
இருந்தன.படங்களுக்கான விளக்க வரிகளை ஓவியன் தூரிகைகளால் 
அழகாக எழுதி இருந்தான்.

ஆறாத,அழியாத மனவடுவும்,


ஆறாத,அழியாத மனவடுவும்,
தாளாத சோகமும்,
வீழாத பாசமுமாய் நீளும் 
தீராத தாகம் 

மறக்கப்பட்ட சுமைதாங்கிகள்


இது 1995,1996 காலப்பகுதி வன்னி மண்ணின் சனத்தொகை திடீரென
நான்கு மடங்குகளால் அதிகரித்தது. தங்குமிடம்,நோய் ,உணவு என
பெரும் சவால்களை விடுதலைப்புலிகள் இராணுவ நெருக்குவாரத்துடன்
சேர்த்து எதிர் கொண்டனர்.மலேரியாவாலும்,செப்ற்றிசீமியாவாலும்
அதிக உயிர்கள் போயிற்று .சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும்
பெரிய அளவில் போசாக்கு குறைபாடு தோன்றிற்று.

பூகோளத்தின் எல்லை மட்டுமல்ல சோகத்தின் எல்லையும் பெரியது தான்.


வைகாசி இரண்டாயிரத்தி ஒன்பதுடன் புலிப்போராளிகளின்,அவர்,மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிதறிப்போயிற்று.அவர்கள் பட்ட துயரின்
அளவு ஆராயமுடியாப் பெரியது . தம் இனத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும்
அவா ஒன்றுடனேயே பலர் தானாக புலிகள் அமைப்பில் இணைந்தனர்.
மனிதரில் இருக்கும் அழுக்கான சுயநலத்தை சுருக்கிட்டு இனச்சுமையை
சுமக்கப்போனவர் அவர். அவர்களில் பலர் இன்று மாவீரர் ஆகிவிட்டனர்.
பலர் இன்றும் வெளித்தெரியா சிறைகளில் அங்கங்கள் பிடுங்கப்பட்டு
சித்திரவதையில் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .

உண்மைக் கதை - 04


வெறும் நூலில் தொங்கும் வாழ்க்கை அவனைப்பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.பாடசாலையில்படிப்பில் எப்போதும் முதலாம் பிள்ளையாய் வருவான்.அவனுக்கு கணிதம்,விஞ்ஞானம் ,விளையாட்டில் அதிக விருப்பம்.பள்ளிக்கூடத்தில் வழமைபோல எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும்.அவனின் பட்டப்பெயர் விஞ்ஞானப்பண்டிதர்.பண்டிதர் என்றே சகமாணவர் கூப்பிடுவார்கள் .அவனுக்கு விஞ்ஞானியாய் வரவேண்டும்
என்பதில் பித்துப்பிடித்திருந்தான்.இதற்கு சமுகம் எந்தளவுக்கு
காரணம் என்று புரியவில்லை.அவனுக்கும் அந்த திறமை
இருந்ததோ என்று சரியாகத் தெரியவில்லை.

மாவீரர்கள் அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்

மாவீரர்கள்
காலத்தால் அழியாதவர்கள்
அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்
விடுதலைத் தீயை
தமக்குள் சுமந்து ,
பாசமழையை
எம்மீது கொட்டியவர்கள்
வீரர்களுக்கு சாவு இல்லை
இவர்களுக்கு ஈடு இல்லை





யார் செய்தது குற்றம் ?


விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

எழுத்தாளர்,மாவீரர் மலரவன்


மலரவன் -  இவன்  கோட்டை,காரைநகர்,மாங்குளம்,சிலா வத்துறை,ஆனையிறவு ,மணலாறுஉள்ளிட்ட பல இராணுவ முகாம் தாக்குதலில் பங்குபற்றி வளலாய் தொடர் காவலரண் (24/11/1992) தாக்குதலில் கப்டன் மலரவனாய்  வீரச்சாவு எய்தினான். பசிலன் மோட்டார் அணியின் துணைப் பொறுப்பாளராயும்வி.பு களின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு   பொறுப்பாளராயும்,யாழ் மாவட்ட இராணுவ அறிக்கை பொறுப்பாளராயும் கடமை செய்தான்.

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.


"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?


குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?

சுதந்திரம் மீள வருமா?


பூர்வீக மண்ணில
சொந்த உழைப்பில
கட்டின வீட்டில
மீள் குடியேற்றமாம்.

காதல் -சிறு குறிப்பு


பூவைப் போல
காதல் இல்லை
பூ உதிர்ந்து விடும்
வேரைப்போல
காதல் வேண்டும் .
மழைக்காலத்தில் வரும்
சூரிய ஒளியைப்போல
காதல் தேவைப்படுகிறது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
விலங்குகளுக்கும் தான்.

அம்மா அது உனக்குப் போதும்


தாயை திருப்பி
அனுப்பியது இந்தியா.
படுக்கை,
பக்கவாத நோயாளிக்கு
வர விசா வழங்கி
வந்த பின்
திருப்பியது இந்தியா
வெந்தது ஈவு,இரக்கம்.

காற்றினில் செல்லும் புலம்பல்


அப்பா அம்மா
மனைவி பிள்ளைகள்
வீடு சமூகம் இனம் என்ற
கட்டுக்கோப்புகள்
மணல்வீடு ஆகிடுமா?

வனம் கூட அழியாமல்
காவல் காத்த தெய்வங்கள்
எங்கே?
நாடு,மக்கள் என்று
துளியும் சுயநலமற்ற
மாவீரர் அவர்
சுவடுகள் எங்கே?

விடுதலையும் காதலைப் போல


இன அழிப்பு
அல்லது இனச்சுத்திகரிப்பு
இனக் கலப்பு
நிலப்பறிப்பு
ஈழத்தமிழரை
இல்லாதாக்கும்
சிங்களக் கனவு நனவாகுமா?
கோடரிக்காம்புகள்,
விலாங்கு மீன்களுக்கு
என்ன நடக்கும்?
வாழும் உரிமைதான் போகிறது
வாழ்ந்த அடையாளமுமா?

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு


எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.

காந்தியின் கண்ணீர்


நண்பா உன் சிலையையா
உடைக்கிறார்கள்?

நல்லூரில்
நல்கந்தன் முன்
நலிந்த இனத்தின்
நலன் வேண்டி
நீர் கூட அருந்தாமல்
ஈரேழு நாட்கள்
நீ  எரிந்து
ஒப்பற்ற தியாகமானாய்.

உண்மைக் கதை -04


சமாதானம்  எனப் பேசப்பட்ட காலம். வன்னியின் அழகு மேலும் மெருகேறியது. எங்களுக்கெல்லாம்  உலகின் அழகே வன்னிதான் போல இருந்தது.அது போராளிகளுக்கும் ஓரளவு  ஓய்வு  காலம். அவர்களுக்கும்  திருமணம் நடந்தது.இருவரும்  நீண்டகாலப் போராளிகள் . அவனது பெயர் ஈழம் .அவன் மணலாறு படையணியில் இருந்து சண்டையில் காயமடைந்துமுதிர்ந்த மருத்துவர் ஒருவரின்  சமயோசிதத்தால்  மயிரிழையில் உயிர் பிழைத்தவன்.பின் மருத்துவப் பிரிவில் மருத்துவப் 
போராளியாகி நீண்ட மருத்துவப் பணிசெய்தவன்.    

அரச பயங்கரவாதமும் சில பெறுபேறுகளும்.


பதினைந்து  வயதில் 
எழுதப்  பழகுகிறாள் 
எழுதிய கையில்லாததால்.
துரு துரு கண்களால் 
உற்று உற்றுப் பார்க்கிறாள் 
காதுகள் கேட்காததால்.  

பிரியசகி


பிரிவு 
கிழக்கு  மேற்காகிறது.
மனதுகள்  மட்டும் 
ஒருபுள்ளியாய்,
பூமியாய்  சுழல்கிறது.
மனதை  எழுதி, மடித்து 
கடிதமாய்  அனுப்ப 
முகவரிகள்  ஏது?

Wednesday, 21 May 2014

தனியரசு


தமிழர் தாயகத்தை 
அந்நியர் வந்து, அநியாயம் செய்து,
இரு தேசத்தை ஒரு தேசமாய்,
ஒன்றை சிரச்சேதம் செய்தனர்.
தம் நலனுக்காய். 

உண்மைக் கதை 03


மாசி மாதம் 2009. வன்னி.
இராணுவம் சுதந்திரபுரத்தை ஆக்கிரமித்தது. சுதந்திரபுரம்வள்ளிபுனம் எங்கும் பிணக் குவியல்கள். வள்ளிபுனம் சிறுவர் பாடசாலையில் மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் அதிக சுமையை சுமந்து கொண்டிருந்தது. கொத்து கொத்தாய் காயங்கள் வந்தன. சிகிச்சையின்  வினைத்திறன் உச்சமாகவே இருந்தது. இடைக்கிடை மருத்துவமனை எல்லைக்குள்ளும் செல்வந்து விழுந்தது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் இயன்றவரை பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தனர். புதிதாக அனுமதிக்கப் படுகிறவர்கள் மண் முற்றத்தில் கிடத்தப் பட்டிருந்தனர். சத்திர கிச்சை கூடம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.  

கோடை விடுமுறை எனக்கும் அவனுக்கும்


எனது நாட்கள் அழகானவை,
வீட்டைவிட்டு நெடுந்தூரப் பயணம் - மகிழ்வுடன்
வெட்டை வெளியில் “tent” அடித்து – சுகமான
காற்றை அனுபவித்த இரவுகள்
நெருப்புமூட்டி வாட்டியயுவு உண்டு இரசித்த –அழகான
பகல்ப் பொழுதுகள்
அப்படிக் கழிந்த விடுமுறைக்காலம் இங்கே எனக்கு.

புத்தாண்டு எனக்கும் அவளுக்கும்


அவள் எடுத்தாளே அழைப்பு என்பதே விதி
இன்றும் அப்படித்தான் அவளே எடுத்தாள்
"எப்படியண்ணா புத்தாண்டு?"
நான் கேட்கத் தயங்கியதை
அவளே கேட்டுவிட்டாள்.
இண்டைக்கு ஒருநாள் ஒரே வெடிச்சத்தங்கள் தான்
அண்ணார்ந்து பார்க்கவே அழகாய் உள்ளது வானம் என்றேன் நான்
ஒவ்வொரு நாளும் வெடிச்சத்தங்கள்தான் எங்களுக்கு வாழ்க்கை.

மனதின் பாடல்



2010 பிறக்கிறது.
ஐரோப்பா
சில தசாப்தங்களுக்குப்  பின் 
அசாத்திய பனிமழை, அதிக குளிர்.
பால் போல வெள்ளை என்பவர் 
பனிமேடுகளைப்  பார்க்காதவர்.
நீலம் போட்டு வெளுத்த வெள்ளை.
மனதில் இல்லாக் குளிர்மையை 
இயற்கை தருகிறது போல. 

உண்மைக் கதை - 02


2009, ஜனவரி மாதம் வன்னியின் மகிழ்வான காலங்கள் படிப்படியாக மூட்டை கட்டித் தூக்கிப் போகப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சோகம் அப்பிய முகங்களும்இவ்வளவு காலமும் சேர்த்துழைத்த சொத்துக்களை  இடம்பெயர்வோடு எடுத்துச்செல்லும் முயற்சியும் தான்.ஸ்ரீலங்கா இராணுவம் உடையார்கட்டுக் குளத்திற்கு அருகில் வந்துவிட்டதாகச் செய்தி.செல்மழை உடையார்கட்டு சன நெருக்கடி மிக்க பகுதியை சதா பதம் பார்த்த படி இருந்தது. 

உண்மைக் கதை - 01


இது 2007 மன்னாரில்  விடுதலைப் புலிகளின்  கட்டுப்பாட்டுப்  பிரதேசமாக பெரியமடுதச்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான், அடம்பன், ஆண்டான்குளம், பள்ளமடு, வெள்ளாங்குளம் வரை இருந்தது.சுமார் எழுபத்தையாயிரம் மக்கள் வாழ்ந்தனர். அப்பிரதேசத்தில் இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை உச்சமடையத் தொடங்கிற்று.அப்பிரதேச மருத்துவ மனையொன்றில் சத்திரசிகிச்சை கூடம் உருவாக்கப்பட்டது. அச்சத்திரசிகிச்சை கூடத்திற்கு பொறுப்பாக போராளி மருத்துவர் வாணன் நியமிக்கப்பட்டார். அவருக்கு தேவையான  புதிய மருத்துவப் போராளிகளும் இணைக்கப்பட்டனர்.

இதய நாட்டு


உலக அதிசயம் எது?
அன்பு தான்.
அன்பு உருவம் அற்றது .
அன்பு நூலளவாய் இருந்தாலும்
அதன் பலம் மலையையும் விஞ்சும். 

சாட்சி அல்லது வாக்குமூலம்











2009 “விரோதி” வருடமாய்ப் பிறந்தது
கிளிநகர் வெறிச்சோடிப்போயிற்று
மீள் பிரசவத்தின் பின் பத்து வயதுதான்.
வயதின் அழகும், துள்ளலும் அகன்று
அலங்கோலமானது ஆசைநகர்
உழைப்பை, சொத்தை உறிஞ்சி எழுந்தநகர்.
எல்லாம் இழந்து  ஏதிலியாய்க்கிடக்கிறது.
 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி